"ஆண்மை மற்றும் கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும்"- நடிகர் விஜயை விமர்சித்த தயாரிப்பாளர் கே.ராஜன்
விஜய் பயந்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருத்ரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால், அந்தப் படத்துக்கு சென்சாரில் பிரச்னை வருவது இயல்பான ஒன்று தான்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமரிசனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள்.
அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜய்யை என்ன செய்தார்களோ, அந்தப் படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமரிசனமே செய்வதில்லை. விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீஸ்வரர். பணம் அதிகம் சேர்ந்தவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்று பேசினார்.